மதுராந்தகத்தில் அப்பா மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில்
மகனை கொன்ற அப்பா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் இவருடைய அம்மாவும் அருணாகுளம் பகுதியில் வசித்து வருகின்றனர்
இவருடைய தாயாருக்கு இரண்டாவது கணவராக கோபால் என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இதன் காரணமாக கோபாலுக்கும் பார்த்திபனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
இதன் காரணமாக பார்த்திபனின் தாயார் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு சென்னையில் வேலை செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் கோபாலுக்கும் பார்த்திபனுக்கும் இடையே மது குடித்துவிட்டு இரவு நேரத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில் நேற்று அதேபோல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மது போதையில் இருந்த பார்த்திபன் அப்பா கோபாலை சண்டை போட்டு அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால்
மது போதையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பார்த்திபனை கோபால் மரம் வெட்டும் கோடாலியால் தலையில் தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்ப நாய் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.