கல்பாக்கம் அடுத்த தென்பட்டினம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த தென்பட்டினம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா வாசு தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் பேசியவர் இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் குறிப்பாக மருத்துவத் துறையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார் குறிப்பாக நம்மை காக்கும் 48 திட்டம் விபத்து ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று 24 மணி நேரத்தில் ஆகும் செலவினை தமிழக அரசு ஏற்கும் என்றும் இது போன்ற திட்டம் வேறு எந்த மாநிலங்களிலும் கிடையாது என பேசினார். இதனைத் தொடர்ந்து தூய்மையே சேவை என்ற உறுதி மொழி ஏற்றனர் தொடர்ந்து முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகமும் வயது முதிர்ந்தவர்களுக்கு மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகமும் வழங்கினார்.