இருளர் இன மக்களுக்கு கட்டப்படும் வீடுகளை எம் எல் ஏ ஆய்வு

71பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், வடபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் இன மக்கள் நீண்ட காலமாக வசித்து வந்தனர்.

இவர்களுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசு கடந்த 2022- 23ஆம் நிதி ஆண்டில் அப்பகுதி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட தலா 1 பயனாளிகளுக்கு 4. 37 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 21 தொகுப்பு வீடுகள் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்

வடபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தோப்பு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கி வீடுகள் கட்டுவதற்கும் ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான பணிகளும் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியானது தரமற்ற முறையில் நடைபெறுவதாக செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

இதனை அடுத்து செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு நேரடியாக மாவட்ட ஊரக வளர்ச்சி துரை மாவட்ட செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் தனசேகரன், பொறியாளர் செந்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, உள்ளிட்டூர் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி