பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

62பார்த்தது
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகியவை, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ளன.

தாம்பரம், பல்லாவரம்ஆகிய தொகுதிகள் ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் அடங்கியுள்ளன. சோழிங்கநல்லுார் தொகுதி தென்சென்னை லோக்சபா தொகுதியில் உள்ளது.

மாவட்டத்தில், 2, 825 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், உதவி தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப்பின், சோழிங்கநல்லுாரில் 283, பல்லாவரத்தில் 89, தாம்பரத்தில் 85, செங்கல்பட்டில் 131, திருப்போரூரில் 80, செய்யூரில் 46, மதுராந்தகம் - தனி 41 என, மொத்தம் 755 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு, வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பகுதிகளை ஆய்வு செய்யும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட போலீசார் மற்றும் தாம்பரம் மாநகர காவல் போலீசாருடன், மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி