செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள மரத்தில் தடை செய்யப்பட்ட காத்தாடி விடுவதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் மரத்தில் மாட்டி தொங்கிக்கொண்டு இருந்துள்ளது. இதில் அமர்ந்த காக்கா ஒன்று அதனுடைய இறகு நூலில் பட்டு சிக்கிக் கொண்டது நீண்ட நேரமாக காகம் தொங்கி கொண்டிருந்த நிலையில் அதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மதுராந்தகம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காகத்தை மீட்க ஏற்பாடுகள் செய்த நிலையில் காகம் நூலை அறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டது அந்த நூல் காக்கையின் சிறகில் சிக்கி இருந்த நிலையில் மற்ற காக்கையுடன் பறந்து சென்றது பட்டம் விட தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் இதுபோன்று செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.