செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் கோவளம் பெஸ்ட் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வியுடன் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வரும் நிறுவனம் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு புத்தக பையுடன் அரசு பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் கோவளம் ஊராட்சியில் இருந்து பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவளம் எஸ் டி எஸ் நிறுவனர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சந்தர் கலந்து கொண்டு அரசு பள்ளி தனியார் பள்ளி உட்பட கோவளம் ஊராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்க தொகையுடன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் தொடர்ந்து பிரவுட் ஆப் கோவளம் என்ற தலைப்பில் கோவளத்தில் பிறந்து தமிழ் வழி கல்வி அரசு பள்ளியில் பயின்று தற்போது அயல்நாட்டில் பணிபுரியும் விஞ்ஞானியை தேர்வு செய்து அவருக்கு ப்ரவுட் ஆஃப் கோவளம் விருதும் கோவளம் அரசு பள்ளி கட்டிடம் கட்ட தனது சொந்த நிலத்தை வழங்கிய தம்பதியினரை பாராட்டி அவர்களின் சேவையை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கும் பிரவுட் ஆப் கோவளம் விருது வழங்கப்பட்டது.