மூத்த குடிமக்களை சுற்றுலா அழைத்துச் சென்ற ஊராட்சிமன்ற தலைவர்

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை மற்றும் படூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து படூர் ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்காக எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறது, இதில் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கான ஒரு நாள் இன்ப சுற்றுலாவை ஏற்பாடு செய்து 60 வயதிற்கு மேற்பட்ட படூர் ஊராட்சியில் உள்ள மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து அரசியல் சார்ந்த உணர்வுப் பூர்வமான இடங்களைக் கண்டு அரசியல் தலைவர்களின் வரலாற்றை மூத்த குடிமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள காமராஜர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், மொழிப்போர் தியாகிகள் மண்டபம், ராஜாஜி நினைவிடம், கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை என கண்டு களித்து அறுசுவை உணவு உண்டு உணவு இடைவேளைக்குப் பிறகு பேரறிஞர் அண்ணா நினைவகம், முன்னாள் முதல் அமைச்சர்கள் கருணாநிதி நினைவிடம், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை சுற்றி பார்க்க ஏற்ப்பாடு செய்யப்பட்டு அதன் துவக்க விழா மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர் தலைமையில் நடைபெற்றது, இந்த இன்பச் சுற்றுலாவை படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் அதனை தொடர்ந்து மூத்த குடிமக்களுடன் மெரினா கடற்கரையில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

தொடர்புடைய செய்தி