'கூலி' படத்தில் ரஜினியுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

58பார்த்தது
'கூலி' படத்தில் ரஜினியுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் 'கூலி'. சன் பிக்சரஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி