ஹோட்டல் அறைகளில் எங்கு கேமராக்களை மறைத்து வைத்திருப்பார்கள் என்றே சொல்ல முடியாது. பெரும்பாலும் மின்னணு சாதங்களில் தான் கேமராக்கள் மறைக்கப்படுகின்றன. ஸ்பீக்கர்கள், சுவர் கடிகாரம், அலங்கார பொருட்களில் மறைத்து வைத்திருக்கலாம். குளியலறையில் கொக்கிகள், துணியை தொங்கவிட பயன்படுத்தப்படும் ஹேங்கர்களிலும் கேமராக்களை மறைத்து வைக்கின்றனர். மேலும் அறையில் உள்ள திரைச்சீலைகள் பின்னாலும் கேமராக்கள் மறைத்து வைக்கப்படுகின்றன.