பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். இது அவர் வெல்லும் இரண்டாவது தங்க பதக்கமாகும். மேலும், அதே போட்டியில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இறுதிச் சுற்றில் அவ்னி 249.7 புள்ளிகளும், மோனா 228.7 புள்ளிகளும் பெற்றனர். 246.8 புள்ளிகளைப் பெற்று தென் கொரிய வீராங்கனை லீ வெள்ளி பதக்கம் வென்றார்.