திருக்கழுக்குன்றம் அருகே இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் 87 வது பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரம் கிராமத்தில் உள்ள ராணி தோட்டத்தில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் 87 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இயற்கை விவசாயம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி ராணி தோட்டத்தின் உரிமையாளர் ராணி
பக்ஷிராஜன் இவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் இயற்கை ஆர்வலர்கள்
இறையழகன்,
மரம் மாசிலாமணி,
தமிழ்ச்செல்வன்,
பொன் பண்ணை கணேஷ்,
வீரராகவன்,
ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டுமரம் வளர்ப்பது, இயற்கை விவசாயம் செய்வது, கோழி பண்ணை அமைப்பது, இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இயற்கை விவசாயத்தை எவ்வாறு செய்வது இயற்கை முறையில் எவ்வாறு பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.