மேட்டுப்பாளையம் சாலையில் சேதமடைந்த மின்கம்பம்

85பார்த்தது
மேட்டுப்பாளையம் சாலையில் சேதமடைந்த மின்கம்பம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒரகடம் செல்லும் சாலையில் உள்ளது. இவ்வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். ஒரகடம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே, இந்த சாலையோரம் உள்ள மின்கம்பத்தில், அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோதி, மின்கம்பம் முற்றிலும் சேதடைந்துள்ளது. சிமென்ட் காரை பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பி மட்டும் உள்ள இந்த மின்கம்பம், எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, விபத்து ஏற்படும் முன், சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி