அரசு அனுமதி பெறாமல் இயங்கும் தார் கலவை ஆலை

76பார்த்தது
திருக்கழுக்குன்றம் அருகே அரசு அனுமதி பெறாமல் இயங்கும் தார் கலவை ஆலையால் பொதுமக்களுக்கு மூச்சு திணரல் ஏற்படுவதாகவும் - விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஈச்சங்கருணை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 2 தார் கலவை ஆலைகள் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தார் ஆலையில் வெளி இடங்களிலிருந்து திரவ தார் கொண்டு வரப்பட்டு ஆலைகளில் தார் சூடேற்றப்பட்டு அதில் ஜல்லி கொட்டப்பட்டு தார் கலவை தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் கரும் புகையாலும், தூசுதுகள்களாலும் அப்பகுதியிலுள்ள 50 ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு பொது மக்களுக்கு மூச்சு திணரல் ஏற்படுவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி சுந்தர்ராஜன் தெரிவித்தார். மேலும் சட்டவிரோதமாக அரசு அனுமதி பெறாமல் இந்த ஆலைகள் இயங்குவதாகவும் தெரிவித்தவர் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி