நெடுஞ்சாலை பஸ் நிறுத்தங்களில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

60பார்த்தது
நெடுஞ்சாலை பஸ் நிறுத்தங்களில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
வாலாஜாபாத்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் இருந்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள், பல பகுதிகளில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், நிழற்குடை வசதியின்றி வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.


குறிப்பாக, வாலாஜாபாத் அடுத்த, புளியம்பாக்கம், சங்கராபுரம், பழையசீவரம், உள்ளாவூர் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதனால், இப்பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிப்படுகின்றனர்.


இச்சாலையில், குறிப்பிட்ட சில பேருந்து நிறுத்தங்களில், தென்னங்கீற்றாலான தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டது. நாளடைவில் அக்கூரைகள் காற்று மழைக்கு சேதமாகி காணாமல் போயின.


எனவே, வாலாஜாபாத்- - செங்கல்பட்டு சாலையில், நிழற்குடை அகற்றம் செய்த பகுதிகளில் புதிய நிழற்டை கட்டட வசதி ஏற்படுத்த, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி