காளியம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசை

78பார்த்தது
காளியம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசை
காஞ்சிபுரம் அடுத்த, சாமந்திபுரம் கிராமத்தில், காளியம்மன் சமேத அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம், காலை 7: 00 மணி அளவில் அம்மனுக்கு அபிஷேகத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, காலை, 10: 00 மணி அளவில் கரக வீதியுலா, பிற்பகல் 1: 00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

மாலை ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சியும், இரவு 9: 00 மணி அளவில் காளியம்மன் மற்றும் வீரபத்திரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

தொடர்புடைய செய்தி