திருவிழாவின் தேரோட்டத்திற்காக அவசர கதியில் போடப்படும் தார்சாலை

84பார்த்தது
அச்சரப்பாக்கம் அருள்மிகு. ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் தேரோட்டத்திற்காக அவசர கதியில் போடப்படும் தார்சாலை
சித்திரை மாதம்
முதல்நாள்கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்ட விழா வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கப்பட உள்ளது.
தேரோடும் வீதிகளான நான்கு மாட வீதிகளும் சிமெண்ட் சாலைகளால் ஆனது. நான்கு மாட வீதிகளான சிவன் கோயில் தெரு, பஜார் தெரு,
யாதவர் வீதி, உள்ளிட்ட வீதிகளில் முழுமையான சிமெண்ட் சாலை பெயர்ந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது.
தேரோட்டத்திற்கான தகுதியற்ற சாலையாக உள்ளது. தற்பொழுது, இரவோடு, இரவாக தேரோட்டத்திற்காக அவசரகதியில் மாட வீதிகளிலும் ஆங்காங்கே தற்காலிகமாக பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தற்காலிகமாக ஆங்காங்கே போடப்படும் சாலை ஒட்டு பணிகளால் தேர் திருவிழாவின் போது பெரிய தேர் மற்றும் சிறிய தேர் செல்ல சாலைகள் ஏதுவாக இருக்குமா.? என கருதுகின்றனர் பொதுமக்கள்ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது என்பது தெரியும். ஒரு மாதத்திற்கு முன்பே சாலை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தேரோட்டத்திற்கு 2 நாள்கள் முன்னதாக சாலை அமைப்பது பணம் சம்பாதிப்பதற்கான
வழியாகவே தெரிகிறது
திமுகவார்டு கவுன்சிலர் மீது
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்குற்றச்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி