மதுராந்தகத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
வக்ப் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி மதுராந்தகத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஜார் வீதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் முகமது ரஃபிக் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் சர்வத்கான் அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு எதிராக சிறுபான்மைகளை சிதைக்காதே, அரசியல் சட்டங்களை புதைக்காதே, வாக்கியத்தின் உச்சரத்தில் வக்ப் சட்டம் திருத்துகிறாய் மதவெறியோடு பாசிச போக்கை சட்டத்தில் செலுத்துகிறாய் என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி