மத்தியப் பிரதேசத்தில் 5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். பிப்., 22 அன்று ஷிவ்புரியில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுமியின் உடலில் கடிபட்ட காயங்கள், ரத்தக் காயங்கள் இருந்துள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 17 வயதான பக்கத்துவீட்டு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.