உணவகங்களில் விற்கப்படும் இட்லியில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகளை கண்டறிந்ததாக கர்நாடக அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில், பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட்டுகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சூடுபடுத்தும் போது பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து 'carcinogenic' என்ற ரசாயனம் வெளியேறி புற்றுநோய்க்கு வழிவகுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.