தமிழக வெற்றி கழக சார்பாக நலத்திட்ட உதவி விழா

51பார்த்தது
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்யின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் ஒன்றிய மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகளை மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் ஒன்றிய மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் தேவா ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றி கழக மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஏழை எளிய மற்றும் ஆதரவற்றோர் என 200 க்கும் மேற்பட்டோருக்கு பாய் தலையணை சேலை போர்வை மின்விசிறி, பிளாஸ்டிக் வாலி உள்ளிட்ட பொருட்களுடன் கணினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சூரிய நாராயணன், மோகன்ராஜா, பாலாஜி திருக்கழுக்குன்றம் ஒன்றிய
செயலாளர் கார்த்திக் ஒன்றிய பொருளாளர் குருநாதன் ஒன்றிய துணை செயலாளர் குமரேசன் ஒன்றிய துணைத் தலைவர் மோகன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி