அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, போலீசாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், மாமல்லபுரம் ஆகிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளது.
தாம்பரம் காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட, வண்டலுார், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளன. மகளிர் காவல் நிலையங்களில், குடும்ப பிரச்னை, வரதட்சனை, பாலியல் வழக்குகள் தொடர்பாக, விசாரணைக்காக, ஆண், பெண் இருவரும் வருகின்றனர்.
இச்சம்பவங்களை கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா அவசியம். மாவட்ட சட்டம் - ஒழுங்கு ஆய்வு கூட்டம் கடந்த மாதம், நடந்தபோது, செங்கல்பட்டு மாவட்ட காவல் மாவட்டத்தில் உள்ள. அனைத்து மகளிர் காவல் நீலையத்தில் உள்ள, கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க வேண்டும்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என, எஸ். பி. , ஆணையர் ஆகியோருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.