நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பெருவிழா

58பார்த்தது
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

108 திவ்ய தேசங்களில் 62 வது திவ்ய தேசமாக விளங்கும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருமண தடை நீக்கும் செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது, , கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, , 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 29ஆம் தேதி காலையும், இதனை தொடர்ந்து திருமஞ்சனமும் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது, 10ம் நாள் 02. 05. 2024 அன்று தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி