செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யசோதா முத்துக்குமார் இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறார் திடீரென்று மின் கசிவு காரணமாக குடிசையில் எரிந்து சேதம் அடைந்தது.
இதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர
் மரகதம் குமரவேல், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன் இவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அரிசி, மளிகை பொருள், காய்கறி, வேட்டி சேலை, வீடு கட்டுவதற்கான நிவாரணம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.