மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த குளத்தில் கழிவுநீர் கலந்து மாசடைந்துள்ளது திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி திடீர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பழமை வாய்ந்த வெள்ளேரி குளம் உள்ளது இக்குளத்தில் கழிவுநீர் கலந்து பச்சை நிறத்தில் நிறம் மாறி மாசடைந்துள்ளதை திருப்போரூர் எம்எல்ஏ எஸ். எஸ். பாலாஜி திடீர் ஆய்வு செய்தார் முன்னதாக வெள்ளரி குளத்தில் உள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் வெள்ளேரி குளத்திற்கு மழை நீர் செல்ல மழைநீர் வடிகால்வாய் ஊராட்சி நிர்வாகம் அமைத்தது ஆனால் மழைநீர் வடிகால்வாயில் ஊராட்சியில் உள்ள வீடுகளின் கழிவுநீரை வடிகால்வாயில் விடுகின்றனர் இதனால் அந்த கழிவு நீர் வெள்ளரி குளத்தில் கலந்து மாசடைந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்து சொல்லியும் வடிகால் வாயில் கழிவு நீரை கலப்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தகவல் அறிந்த திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி அப்பகுதியை திடீர் ஆய்வு செய்தார்.