500 மரக்கன்றுகளை நடவு செய்த ஐ டி பணியாளர்கள்

85பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மேலேரிப்பாக்கம் ஊராட்சியில் பி என் ஒய் எனும் மென்பொருள் நிறுவன சுற்றுப்புற மேம்பாட்டு பணிகளின் சார்பில் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேசிய வேளாண் நிறுவனத்துடன் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மேலேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எம் பூபதி தலைமையில் நடைபெற்றது மென் பொருள் நிறுவன சி எஸ் ஆர் தலைவர் டாக்டர் வித்யா மற்றும் தேசிய வேளான் நிறுவன பொறுப்பாளர் காஞ்சனா ஆகியோரின் முன்னிலையில் ஐ டி நிறுவன ஊழியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் பழ வகைகள் மற்றும் நிழல் தரும் மரங்கள், மூலிகை செடிகள் மாமரம் கொய்யா தயலமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர் அதனை தொடர்ந்து விதை பந்துகளை தயாரித்து ஊராட்சிக்குட்பட்ட குளக்கரை மற்றும் ஏரியின் இரு புறமும் வீசினர் அதனை தொடர்ந்து உரியடித்தல் டிராக்டர் ஓட்டுதல் கைப்பந்து விளையாட்டுகளை மென்பொருள் நிறுவன ஊழியர்கள் விளையாடி ஒரு நாள் பொழுதை கழித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கஸ்தூரி புண்ணியகோட்டி வார்டு உறுப்பினர்கள் உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர் நிகழ்ச்சியை தேசிய வேளாண் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கெஜா ஒருங்கிணைத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி