திருக்கழுக்குன்றம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

56பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய கீரப்பாக்கம் ஊராட்சி புல்லேரி பகுதியில் உள்ள அங்கன்வாடியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று(செப்.19) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது குழந்தைகளுக்கு தினமும் வழங்கக்கூடிய உணவு வகைகள் குறித்தும் குழந்தைகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும் அங்கன்வாடி பணியாளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திருக்கழுக்குன்றம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு மேற்கொண்டவர் மாணவிகளுக்கு வழங்கக்கூடிய மதிய உணவினை சாப்பிட்டு உப்பு காரம் உள்ளிட்டவைகள் குறைவாக இருந்ததை சரியாக கவனிக்கும் படியும் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து சமைக்க வேண்டும் என சமையலரிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் கட்டப்படும் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார் தொடர்ந்து அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது சார் ஆட்சியர் நாராயண சர்மா கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி, முன்னாள் எம்எல்ஏவும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளருமான வீ தமிழ்மணி பேரூராட்சி தலைவர் யுவராஜ் பிடிஒ பாஸ்கர் தாசில்தார் ராதா புல்லேரி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி