இறையன்பு நிலவொளி பள்ளி மாணவர்களுடன் உரையாற்றினார்.

61பார்த்தது
இறையன்பு நிலவொளி பள்ளி மாணவர்களுடன் உரையாற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கடந்த 1998 ஆண்டு திரு. இறையன்பு பணிபுரிந்தார். அப்போது பட்டு நெசவு தொழிலும், அப்பளத் தொழிலும் காஞ்சிபுரத்தில் புகழ்பெற்று இருந்த நிலையில் , அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபட்டு குடும்பத்தில் உள்ள பள்ளி பயிலும் மாணவர்கள் கல்வியை இடைநிற்றல் மேற்கொண்டதை அறிந்து , அப்போது குழந்தை தொழிலாளர்கள் இருந்த 181 குழந்தைகளை மீட்டு நிலவொளி பள்ளி என தொடங்கி கல்வி கற்க ஆரம்பித்து வைத்தார்.
அவ்வகையில் இந்த பள்ளி மாலை 7 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 வரை நடத்தப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளில் இதுவரை 20 ஆயிரத்து 731 பேர் இந்த பள்ளிகள் மூலம் கல்வி கற்று சிறப்புடைந்துள்ளனர்.
இந்தப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அங்கு அளித்த ஊக்கத்தின் பேரில் இதுவரை 85 மாணவர்கள் அரசு துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை இன்று முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் சந்தித்து அவர்களுடன் நெகிழ்ச்சி உரையாடல் நிகழ்த்தினார்.
இந்தப் பள்ளியில் பயின்றவர்கள் தங்கள் கடந்த கால கல்வி நிலை, அதனை தொடர நிலவொளி பள்ளி உதவியது உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை தெரிவித்து அனைவரையும் மகிழ செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி