வெப்பத்தாக்கத்தால் மீன் பிடிக்காமல் வீடு திரும்பிய மீனவர்கள்

54பார்த்தது
வெப்பத்தின் தாக்கத்தால் மீன் பிடிக்க முடியாமல் வீட்டிற்கு திரும்பிய மீனவர்கள் தமிழக அரசு உதவ கோரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுடைய வாழ்வாதாரமான மீன்பிடித்தலில் கால நிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க முடியவில்லை என்றும் இன்று காலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வெயிலின் தாக்கத்தால் மீன்பிடிக்க முடியாத சூழலில் உள்ளதாகவும் மீன்பிடிக்க முடியாமல் வீட்டிற்கு திரும்பியதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர் உடனடியாக தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு மீனவர்களுக்கு உதவ நிவாரண தொகையை வழங்க வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி