ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

74பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கள்ள சாராய உயிரிழப்புக்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் பாதிக்கப்பட்டோருக்கு
உரிய நிவாரணம் உறுதியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா. சதீஷ் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் அண்டை மாநிலங்களிலிருந்து வேதிப்பொருள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறது இதனை உடனடியாக தடுக்கப்பட வேண்டும் இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களிலும் கள்ளச்சாரக் குறித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது உள்ள நிலையில் அதிகரித்து வருகிறது மேலும் சாதி மதம் தாண்டி மொழி தாண்டி மாநிலம் தாண்டி கலாச்சாராய விற்பனைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கை தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான படிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மற்றும் ஆதார் சங்கத்தினர் கண்டன கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி