வைகுண்ட ஏகாதசியான இன்று பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று உண்ணாமல் நோன்பு இருப்பவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் மேற்கொண்டு நாளை காலை துவாதசியன்று கோயில்களில் தரிசனம் முடித்த பின்னர் உப்பில்லாத உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யுங்கள். நாளை விரதத்தை நிறைவு செய்யும் பொழுது உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்க்க வேண்டியது அவசியம்.