படூர் ஊராட்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

83பார்த்தது
புரட்சியாளர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தாஸ் பிரதாப் சிங், படூர் ஊராட்சியை சேர்ந்த சமூக சேவகர் ஹரிஷ் ஆகியோர் ஏற்பாட்டில் இளம் வழக்கறிஞர்கள் இணைந்து அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகபை மற்றும் கல்வி உபகரணங்களும் ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலையுடன் அன்னதானமும் வழங்கினர் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் தாஸ் பிரதாப் சிங் ஹரிஷ் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி