மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரை பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா அமைச்சர்கள் ராமசந்திரன், அன்பரசன் துவக்கி வைத்து நிறைவு பெற்றன, இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கண்டு களித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் கடற்கரை ஓரம் சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் ஆண்டாக நடைபெறும் காற்றாடி திருவிழா கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி 18 ஆம் தேதி நிறைவு பெற்றது. திருவிடந்தை கடற்கரையில் காற்றாடி திருவிழாவில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்
தாய்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, மலேசியா
இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ராட்சத காற்றாடியை பறக்கவிட வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு 20-க்கும் அதிகமான வீரர்கள் வருகை தந்து 150 காற்றாடியை பறக்கவிட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 40-க்கும் அதிகமான வீரர்கள் வருகை தந்து 300க்கும் மேற்பட்ட காற்றாடிகளை பறக்கவிட்டுள்ளனர்.