இரும்புலி கிராமத்தில் தனிநபர் வீட்டுமனை அமைப்பதற்கு கிராம பாட்டை பகுதியில் உள்ள பனை மரங்களை அகற்றியவர்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் தனிநபர் ஒருவர் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனை அமைத்து வருகிறார்.
இந்த வீட்டு மனைக்கு முக்கிய வழியாக கிராமத்தின் பாட்டை பகுதி உள்ளது
இந்த பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அகற்றப்பட்டு இந்த வீட்டுமனை அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி இந்த வீட்டு மனை வழியாக செல்லக்கூடிய மழை நீர் வடிகால் கால்வாயும் இருந்தன இந்த கால்வாயும் மூடப்பட்டது
இந்த மழை நீர் வடிக்கால் கால்வாயை அப்பகுதி பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் வடிகால்வாயை சீரமைத்தனர்
எனவே தனி நபர் ஒருவர் வீட்டுமனை போடுவதற்கு கிராம பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய் மற்றும் பனை மரங்களையும் அகற்றியவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.