சிமென்ட் சாலை இல்லாமல் சித்துார் மக்கள் அவதி

85பார்த்தது
சிமென்ட் சாலை இல்லாமல் சித்துார் மக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில் சித்துார் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சித்துார் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

நாளடைவில் சாலை பழுதடைந்து பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பழுதடைந்த சிமென்ட் சாலை, பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

தற்போது வரை புதிய சிமென்ட் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், மழை நேரத்தில் சாலையில் மழைநீர் தேங்கி அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி