நுண்ணீர் பாசன திட்டம் இணை இயக்குனர் ஆய்வு

67பார்த்தது
நுண்ணீர் பாசன திட்டம் இணை இயக்குனர் ஆய்வு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலங்களை சமன் செய்து, தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசனத் திட்டத்தில், மா உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டு, விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.


இத்திட்டத்தில், அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், மொறப்பாக்கம் ஊராட்சியில், 31 ஏக்கர் தரிசு நில தொகுப்பில், திறந்தவெளி கிணறு மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில், தோட்டக்கலைத்துறை மூலம், பல்லாண்டு பழப்பயிரான மா ஒட்டுச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், வடமணிப்பாக்கம், தின்னலுார் ஆகிய கிராமங்களில், தரிசு நில தொகுப்புகளில், சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2023 - 24ம் ஆண்டு, வடக்குப்புத்துார் கிராமத்தில், விவசாயி விஜயகுமார் என்பவர், மானிய திட்டத்தில், 2. 5 ஏக்கரில், டிராகன் பழ மர தோட்டம் அமைத்துள்ளார்.

இப்பணிகளை, தோட்டக்கலை இணை இயக்குனர் - நுண்ணீர் பாசனம் - ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மோகன், உதவி இயக்குனர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி