சரவம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம்

84பார்த்தது
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் சரவம்பாக்கம், ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் வட்டாட்சியர் துரைபாபு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், ஒன்றிய கழக செயலாளர் பொன்சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 15 துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பட்டா மாறுதல், புதிய ரேஷன் அட்டை புதுப்பித்தல், புதிய மின் இணைப்பு உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரியாசக்கரபாணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவகுமார்,
கோமதிவேலு,
பாஸ்கர், சுகன்யாயக் நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி