தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி தமிழ்நாடு இலங்கை கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.