பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு செங்கல்பட்டில் தீர்ப்பு

80பார்த்தது
சென்னை கண்ணகி நகர் பகுதியில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை 2000 ரூபாய் அபராதம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை கண்ணகி நகர் பகுதியில் 29. 12. 2019 வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் வீட்டின் உரிமையாளர் உமாபதி74 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உமாபதிக்கு இரண்டு பிரிவுகளில் 30 ஆண்டு சிறை 2000 ரூபாய் அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது

சிறுமியை தினந்தோறும் அழித்து பேசி சாக்லேட் இனிப்பு பிஸ்கட் வாங்கி கொடுத்து தினந்தோறும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் சம்பவத்தன்று சிறுமி பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டு தாயாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இரு பிறவிகளில் வழங்கப்பட்ட 30 ஆண்டு கால தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி