பூங்காவிற்குள் வழிந்தோடும் கழிவுநீர்

78பார்த்தது
பூங்காவிற்குள் வழிந்தோடும் கழிவுநீர்
காஞ்சிபுரம் மாநகராட்சி, 24வது வார்டு, கே. எம். வி. , நகரில் அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா உள்ளது. இப்பூங்காவை அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பூங்கா அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக 'மேன்ஹோலில்' இருந்து வெளியேறும் கழிவுநீர் பூங்காவிற்குள் வழிந்தோடி, நுழைவாயில் பகுதியில் குட்டைபோல தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், அப்பகுதியினர், 10 நாட்களாக பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவும் பயனின்றி வீணாகி வருகிறது.

எனவே, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க, காஞ்சிபுரம்மாநகராட்சி அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கே. எம். வி. , நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி