விமான சேவை நேரம் மாற்றம்

1550பார்த்தது
சென்னைக்கு, சேலத்தில் இருந்து, மதியம் நேரத்தில் இயக்கப்பட்டு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் விமான சேவை நேரம் மாற்றப்பட்டு, மாலையில் இயக்கப்படுகிறது.

மதிய நேரம் இயக்கப்பட்ட விமான சேவையை, தொடர்ந்து இயக்குவதோடு, மாலை நேரத்திலும் கூடுதல் விமான சேவையை, சென்னை- சேலம்- சென்னை இடையே, இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, காலை 10: 35 மணிக்கு புறப்பட்டு, காலை 11: 40 மணிக்கு சேலம் சென்று விட்டு, அதே விமானம் மீண்டும், பகல் 12: 40 மணிக்கு, சேலத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1: 50 மணிக்கு, சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாலையிலும் கூடுதலாக சென்னை- சேலம்- சென்னை இடையே, விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சேலத்தில் இருந்து மதியம் சென்னைக்கு புறப்பட்டு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேரம், மாலைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 5 மணிக்கு, சேலத்தில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்கிறது. இதனால் மதியம் சேலம்- சென்னை இடையே, இயக்கப்பட்டு வந்த, விமான சேவை ரத்து செய்யப்பட்டு, அந்த சேவை மாலைக்கு மாற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி