பயணிகள் இல்லாமல் அயோத்தி விமானம் ரத்து

69பார்த்தது
சென்னை அயோத்தி, அயோத்தி சென்னை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ஸ்பைஜெட் தனியார் பயணிகள் விமானங்கள் , இன்று போதிய பயணிகள் இல்லாமல், ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து அயோத்திக்கு தினமும் காலை 8. 35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஜெட் தனியார் விமானம் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் காலை 11. 15 மணிக்கு, அயோத்தியை சென்றடையும்.

அதன்பின்பு அதே ஸ்பைஜெட் பயணிகள் விமானம், அயோத்தியில் இருந்து மாலை 5. 45
மணிக்கு புறப்பட்டு, இரவு 8: 20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும்.

இன்று சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் விமானமும், அயோத்தியில் இருந்து சென்னைக்கு வரும் விமானமும், ஆகிய 2 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. போதிய பயணிகள் இல்லாததால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானத்தில் பயணம் செய்ய, ஒரு சில பயணிகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்து இருந்ததாகவும், அவர்கள் பயண டிக்கட்டுகள், அவர்கள் விரும்புகின்ற தேதிக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும், இல்லையேல், பயணிகளுக்கு பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படுவதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி