குஜராத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

59பார்த்தது
குஜராத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
குஜராத் மாநிலத்தில் இன்று நில அதிர்வு ஏற்பட்டது. அம்மாநிலத்தின் குட்சா மாவட்டம் ரபர் நகரின் மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இன்று காலை 10.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. முன்னதாக, குஜராத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி