மின் இணைப்பு வழங்காததால் திறப்பு விழா காணாத அங்கன்வாடி

582பார்த்தது
மின் இணைப்பு வழங்காததால் திறப்பு விழா காணாத அங்கன்வாடி
சித்தாமூர் அருகே கன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டுவந்தது. இங்கு, 15 குழந்தைகள் படித்து வந்தனர். மேலும், கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் பழுதடைந்தது. பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடி மையம், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கட்டடத்தில் சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டுவந்தனர். இதையடுத்து, 2021 - 22 ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்கட்டப்பட்டது. இந்த புதிய அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வழங்காததால், கடந்த ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால், கட்டடம் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தைகளின் நலன் கருதி, புதிய அங்கன்வாடி மையத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். "

தொடர்புடைய செய்தி