தில்லி-அஜ்மீர் விரைவுச் சாலையில் (200 அடி பைபாஸ்) லாரி ஒன்று நேற்று (ஆகஸ்ட் 30) பிற்பகல் மேம்பாலத்தில் இருந்து பறந்து சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த தண்ணீர்-டேங்கர் டிராக்டர் மீது விழுந்தது. இதில், தண்ணீர் லாரி டிரைவர் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். விபத்து சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.