ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து

63பார்த்தது
மும்பை- சென்னை- மும்பை, டெல்லி- சென்னை- டெல்லி ஆகிய, 4 விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ஒரே நாளில் திடீரென ரத்து.

அதைப்போல் மும்பை- கோவை- மும்பை ஆகிய, 2 விஸ்தாரா ஏர்லைன்ஸ், பயணிகள் விமானங்களும் இன்று ரத்து.

ஒரே நாளில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை வந்து செல்ல வேண்டிய 6 விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகள் கடும் அவதி.

இதை போல் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து.

விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், பொறியாளர்கள் போதிய அளவு பணிக்கு வராததால், இதைப்போல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தகவல்.

மும்பையில் இருந்து நேற்று இரவு 7. 30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து நேற்று இரவு 8. 20 மணிக்கு, சென்னை வந்து சேர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதைப்போல் சென்னையில் இருந்து இரவு 8. 30 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இரவு 9. 05 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 4 விமானங்கள், நேற்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி