துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

56774பார்த்தது
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் சவானி வளாகத்தில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் தீப்பிடித்ததில் கடையின் மேல் தளத்தில் வசித்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இச்சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் நடந்துள்ளது. இறந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சடலங்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி