4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

55பார்த்தது
4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று புதன்கிழமை தென் தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி