28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

83பார்த்தது
28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய 15வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட், யாஷ் தயால், சிராஜ், டாப் லீ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

தொடர்ந்து, பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி