மதுரை அழகர் கோவிலில் கலந்தாய்வு கூட்டம்

55பார்த்தது
மதுரை அழகர் கோவிலில் கலந்தாய்வு கூட்டம்
மதுரை சித்திரை திருவிழா குறித்து அழகர்கோவிலில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மண்டல அறநிலைத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் கலந்தாய்வுக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருக்கோவிலின் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள், திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் சீர்பாதம் தாங்கிகள் ஆகியோரிடம் சித்திரை திருவிழா குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி