உளுந்தூர்பேட்டையில்: இன்ஜினியரிடம் வழிப்பறி

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் வினோத், 29; சென்னை, போரூரில் தனியார் நிறுவன பொறியாளர். 12ம் தேதி நண்பரின் திருமணத்திற்கு கோவை சென்றார். பின், நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார். நேற்று அதிகாலை, 1: 30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இயற்கை உபாதைக்காக பைக்கை சாலையோரம் நிறுத்தினார்.


அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த நான்கு நபர்கள், வினோத்தை மிரட்டி தாக்கினர். அவரிடம் இருந்த, 1 சவரன் செயின், லேப்டாப், ஐபோன், 2, 000 ரூபாய், ஏ. டி. எம். , கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினர்.


அதிர்ச்சியடைந்த அவர், அருகே உள்ள டீக்கடையில் இருந்தவர்களிடம் மொபைல் போன் வாங்கி, உளுந்துார்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி